நீரிழிவு நோயாளிகளின் அன்றாட கவனத்திற்கு

0
204

201605310737158375_Daily-attention-of-diabetic-patients_SECVPFசர்க்கரை நோயாளிகள் தினமும் தன் ரத்த சர்க்கரையின் அளவினை சர்க்கரை நோய் இல்லாதவர்களின் சர்க்கரை அளவினைப் போல் நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை அவரது மருத்துவர், உணவு நிபுணர் இவர்களின் துணை கொண்டு செய்ய வேண்டும்.

உடன் அவரது குடும்ப உறவுகள், நண்பர்கள் இவர்களின் உதவியும் வேண்டும். இது ஒன்றும் ஒற்றை கால் தவம் அல்ல. கொழுப்பு குறைந்த, சர்க்கரை இல்லாத, உப்பு குறைந்த, நார்சத்து மிகுந்த உணவு தேவை அவ்வளவுதான். இதைக் கற்றுக் கொண்டு விட்டால் சர்க்கரை நோய் பிரச்சினையாகவேத் தெரியாது.

* முதலில் சரியான எடையில் இருங்கள்.
* தினமும் உங்கள் சர்க்கரை அளவு சரியாய் இருக்க வேண்டும்.
* ரத்த குழாய், இருதய நோய் இல்லாது இருக்க வேண்டும்.

நீங்கள் இன்சுலின் எடுப்பவராக இருந்தால்

* உங்கள் ரத்த சர்க்கரை, மருந்து இவற்றுக்கேற்ப எவ்வளவு இன்சுலின் எடுக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
* தினமும் சாப்பிடும் நேரம், சாப்பிடும் அளவு மாறாது இருக்க வேண்டும். ஒரு நாள் காலை 7 மணி, மறுநாள் காலை 10 மணி என நேரங்கள் மாறுபடக்கூடாது.
* இன்சுலின் எடுத்துக் கொண்ட பின் நேரம் கடந்து உண்பதோ அல்லது உண்ணாது இருப்பதோ கூடாது. வேகமாக சர்க்கரையின் அளவு இறங்கி ஆபத்தில் கொண்டு விடும்.

நீங்கள் இன்சுலின் உபயோகிப்பவர் இல்லை என்றால்

* முறையான உணவுப் பழக்கத்தினை கடை பிடியுங்கள்.
* மருந்து உட்கொண்ட பின் உணவினை தவிர்ப்பதோ, காலம் தாழ்த்தி உண்பதோ கூடாது. மாறாக சிறிது சிறிதாக குறிப்பிட்ட நேர இடைவெளியில் உண்பது சர்க்கரை அளவினை சீராய் வைக்க உதவும்.
நடை பயிற்சி, நீச்சல், நடனம், சைக்கிள் போன்றவை சர்க்கரை பாதிப்பு உடையோருக்கு மிகவும் நல்லது.
* உடற்பயிற்சி எடையை சீராய் வைக்கும்
* உடற்பயிற்சி இன்சுலின் நன்கு வேலை செய்ய உதவும்
* உடற்பயிற்சி இருதயத்திற்கும், நுரையீரலுக்கும் நல்ல பாதுகாப்பு தரும்.
* உடற்பயிற்சி உடலுக்கு சக்தி தரும்.
நீங்கள் இன்சுலின் பயன்படுத்துபவர் என்றால்
* வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாதீர்கள்.
* உடற்பயிற்சி செய்யும் முன், செய்யும் போது, செய்த பிறகு என அடிக்கடி சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சர்க்கரையின் அளவு 240-க்கும் மேல் இருந்தால் அந்நேரத்தில் உடற்பயிற்சி செய்யாதீர்கள்.
* தூங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்யாதீர்கள். அது ஒரு வேலை தூக்கத்தில் சர்க்கரையின் அளவினை குறைத்து விடலாம்.

நீங்கள் இன்சுலின் எடுத்துக் கொள்ளவில்லை என்றால்

* உங்கள் உடற்பயிற்சி பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள்.
* மருந்து உட்கொள்பவர் என்றால் பயிற்சி செய்யும் முன்னும், பின்னும் நீங்களே உங்கள் சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் இன்சுலின் பயன்படுத்தினால்

ஒன்று உங்கள் உடலில் இன்சுலின் சுரப்பது நின்றிருக்கலாம். அல்லது தேவையான அளவு சுரக்காமல் இருக்கலாம். பொதுவில் பிரிவு-1ல் இருப்பவர்களுக்கு இன்சுலின் அத்தியாவசியம் ஆகின்றது. பிரிவு 2-ல் இருப்பவர்களில் சிலருக்கும் இன்சுலின் தேவைப்படுகின்றது. ஒரு முறையோ, இருமுறையோ இதனை ஊசி மூலம் தானே எடுத்துக் கொள்ள மருத்துவர் நன்கு சொல்லிக் கொடுப்பார். இத்தகையோர் ஏதாவது உடம்பு சரியில்லை ஜீரம், பளு போன்றவை இருந்தாலும் ஒருவேளைகூட தேவைக்கேற்ப இன்சுலின் எடுத்துக் கொள்ளாமல் இருக்கக் கூடாது.

இன்சுலின் போட்டுக் கொள்ள ஏற்ற இடங்கள்.

* தோளின் வெளிப்புறம்
* இடுப்பைச் சுற்றி
* வடு, பிரசவ கோடுகள் இருக்கும் இடங்களைத் தவிர்க்கவும்.

முதலில் சுயமாய் இதனை போட்டுக் கொள்வோருக்கு பயமாய் இருக்கலாம். அவர்கள் பழகிய பின் இதனை எளிதாய் கையாளுவர். மிக சிறிய ஊசிகள் அதிகமாக உள்ளே செல்லாதவை. இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள் பிறரது ஊசிகளை தவறிக் கூட உபயோகப்படுத்தக் கூடாது. உபயோகித்த ஊசிகளை முறையாய் அப்புறப்படுத்தி விட வேண்டும். எப்போதும் கொஞ்சம் இன்சுலின் மருந்தினை கைவசம் கூடுதலாக வைத்துக் கொள்வது நல்லது. அதிக உஷ்ணம், அதிக குளிர்ச்சி, அதிக ஒளி இவை மருந்தினை பாதிக்கும்.

நினைவில் கொள்ளுங்கள் அளவான எடை உங்கள் இன்சுலின் தேவையினைக் குறைக்கும். அடிக்கடி உங்கள் சர்க்கரை அளவினை நீங்களே பரிசோதித்துக் கொள்வது மிகவும் நல்லது. கிறீநீ என்ற முறையில் செய்யப்படும் ரத்த பரிசோதனையில் மூன்று மாத கால சர்க்கரை அளவு தெரிய வரும்.

* உங்கள் சர்க்கரை அளவு குறைந்து இருந்தாலோ
* அதிக சோர்வுடன் இருந்தாலோ
உடனடி மருத்துவ உதவி அவசியம் என்பதனை நினைவில் வையுங்கள்.
உங்கள் மருத்துவர் அனுமதிக்கும் பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இனிப்பின் சுவையும் கிடைக்கும். நிறைந்த வைட்டமின்கள், தாது உப்புகள், நார்சத்து இவை கிடைக்கும்.

உடற்பயிற்சி என்றால் ‘ஜிம்’ மட்டும்தான் என்று நினைக்காதீர்கள். எல்லோருக்கும் அது இயலாததாக இருக்கலாம். உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றினை தேர்ந்து எடுங்கள். விளையாட்டு, டான்ஸ், யோகா, நடை, நீச்சல் என ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுங்கள். உங்கள் இருதயத் துடிப்பினை கூட்டச் செய்வதாக அது இருக்க வேண்டும். இதில் உங்கள் மருத்துவரின் ஆலோசனையும் அவசியம்.

கையில் ஒரு கார்போஹைட்ரேட் கொண்ட ‘ஸ்நாக்’ அவசியம் வைத்திருங்கள். நீங்கள் சர்க்கரை நோய் பாதிப்புடையவர் என்று நன்கு தெரிந்த உங்கள் நண்பரோடு உடற்பயிற்சி செய்யுங்கள். காலுக்கு தரமான ‘ஷூ’ அணிவதில் கஞ்சத் தனம் வேண்டாம்.

பயிற்சி செய்யும் முன்பும், நடுவிலும், முடிந்த பின்பும் சிறிது தண்ணீர் குடியுங்கள். ஏதேனும் வலியோ அல்லது சோர்வோ தெரிந்தால் உடனடியாக பயிற்சியினை நிறுத்தி விடுங்கள். கடினமான பயிற்சியினை செய்யும் போது தற்காலிகமாக உங்கள் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம்.

LEAVE A REPLY