சச்சின் சாதனையை முறியடித்த அலாஸ்டர் குக்

0
96

201605302158095948_Alastair-Cook-surpasses-Sachin-Tendulkar-as-fastest-to-10k_SECVPFஇளம் வயதில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் அலாஸ்டர் குக் முறியடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் சச்சின், டிராவிட், இலங்கை வீரர்கள் சங்ககரா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் லாரா, சந்தர்பால் போன்றோர் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர். ஆனால், இங்கிலாந்து வீரர்கள் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் என்ற மைல் கல்லை எட்டியது கிடையாது. இந்த ஏக்கம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருப்பவர் அலாஸ்டர் குக். இவர் தற்போது நடைப்பெற்று வரும் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இராண்டாவது இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

சச்சின் 10 ஆயிரம் ரன்களை கடந்த போது அவரின் வயது 31 ஆண்டுகள், 10 மாதம் மற்றும் 20 நாட்கள் ஆகும். இன்று 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ள அலாஸ்டர் குக்கின் வயது 31 ஆண்டுகள், 5 மாதம் ஆகும். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் 10 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற பெருமையை அலாஸ்டர் குக் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY