மட்டக்களப்பு பல்கலைக்கழக சரீஆ பாடத்திட்டம், உம்முல் குறா பல்கலைக்கழக பேராசிரியரால் இராஜாங்க அமைச்சரிடம் கையளிப்பு

0
166

(எம்.ரி.எம்.யூனுஸ்)

IMG-20160531-WA0003-1024x682மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கான சரீஆ பாடத்திட்டத்தை உருவாக்க மக்காஹ் உம்முல் குறா பல்கலைக்கழக பேராசியர் குழுவிடம் கடந்த மாதம் சவுதி அரேபிய விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கமைவாக மக்காஹ் உம்முல் குறா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமி அவர்களின் தலமையிலான குழுவினர் பாடத்திட்டத்தை தயாரித்து அதன் முதல் பிரதியை புனர்வாழ்வு புனரமைப்பு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ லங்கா ஹிறா பெளண்டேஷனின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் நேற்று (30) உத்தியோக பூர்வமாகக் கையளித்தனர்.

பல்கலைக்கழகத்தின் ஷரீஆ பீடத்துக்கான பாடத்திட்டத்தை அமைக்கும் அப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமி அவர்களின் தலைமையிலான உயர் குழுவில் மக்காஹ் உம்முல் குறா பல்கலைக்கழகத்தின் சுமார் 20 பேராசிரியர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20160531-WA0000-1024x682 IMG-20160531-WA0001-1024x682

LEAVE A REPLY