கிழக்கு முதலமைச்சருக்கு இருந்த தடை உடனடியாக நீக்கம்

0
99

(அஹமட் இர்ஷாட்)

a4d0d569-be05-4991-98f9-955736521995கிழக்கு முதலமைச்சருக்கு இருந்த தடை உடனடியாக நீக்கப்பட்டமையாது முதுகெலும்புள்ள முதலமைச்சர் என்பதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அண்மையில் திருகோணமலையில் இடம் பெற்ற நிகழ்வின் பொழுது கடற்படை அதிகாரியினை அவமானப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிழக்கின் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹ்மட் முப்படைத்தளங்களில் இடம் பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளின் அடிப்படையில் முதலமைச்சருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக நீக்கப்பட்டு வழமை போல முப்படைதளங்களில் இடம் பெறும் நிகழ்வுகளில் முதலமைச்சர் கலந்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்வமானது கிழக்கின் இன, மத, மொழி, வேறுபாட்டிற்கு அப்பால் நின்று செயற்பட்டு வரும் முதலமைச்சருக்கு கிடைத்த பாரிய வெற்றியாகவும் தேசியத்திலே அவருக்கு இருக்கின்ற நன்மதிப்பினையும் எடுத்து காட்டுவதாக அமைகின்றது. அதுமட்டுமல்லாமல் கிழக்கு மகாணத்தின் சிறுபான்மை சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்திய முதலமைச்சர்களில் தான் ஒரு முதுகெலும்புள்ள முதலமைச்சர் என்பதானது முதலமைச்சருக்கு கிடைத்த இத்தடை நீக்க வெற்றியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY