சுத்திகரிப்பு, சிகிச்சை முகாம் பணிகளில் ஈடுபட்ட முஸ்லிம் எய்ட் அடுத்த கட்ட செயற்பாடுகளுத் தயாராகிறது

0
156

(அஸீம் கிலாப்தீன்)

MuslimAidlogo-Web-20140606115859330வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியிலும் வைத்திய முகாம் செயற்பாடுகளிலும் முஸ்லிம் எய்ட் நேற்றும் இன்றும் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளது. கமதவத்த, அம்பகஹசந்தி, பொல்கஹபிட்டி வீதி, விமலரதன மாவத்த ஆகிய பகுதிகளிலுள்ள 26 வீடுகளை 35 ஊழியர்களும் தொண்டர்களும் ஐந்து குழுக்களாகப் பிரிந்து சுத்தம் செய்தனர். முஸ்லிம் எய்ட் ஊழியர்களுடன் அதன் பங்காளர் அமைப்புகளான தடயம் தொண்டர்கள் இப் பணிகளில் ஈடுபட்டனர். முஸ்லிம் எய்ட் இன் மற்றுமொரு பங்காளர் அமைப்பான ரெக்டொ அமைப்பின் தொண்டர்கள் முஸ்லிம் எய்ட் உடன் இணைந்து இன்றுடன் எதிர்வாரும் இரண்டு நாட்களிலும் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுவர்.

தவிர, மாதம்பிட்டிய பகுதியிலுள்ள வெலிகொட பகுதியில் நடைபெற்ற வைத்திய சிகிச்சை முகாமிற்கான மருந்துகளை முஸ்லிம் எய்ட் வழங்கியதுடன், இம் முகாமில் அதன் உறுப்பினர்களும் தொண்டர்களும் ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளனர். எம்எப்சீடி அமைப்பின் தொண்டர்களும் இம் மருத்துவ முகாம் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கினர்.

இன்றைய சுத்திகரிப்புப் பணிகள் RCC அமைப்பின் தகவலின் பிரகாரம் பிரண்டியாவத்த முதலாவது ஒழுங்கையில் தற்போது நடைபெற்று வருகின்றது.

அடுத்து வரும் நாட்களில் 200 உணவு அல்லாத பொருட்கள் சில அடங்கிய பொதிகளும், 1000 உலர் உணவுப் பொதிகளும் முஸ்லிம் எய்ட் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கத் திட்டமிட்டதுடன், இழப்பு மதிப்பீடுகளில் ஈடுபடுவதற்காக RCC மேற்கொள்ளும் செயற்பாடுகளில் தொண்டர்களை ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளது. மேலும் அடுத்து வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள கிளினிக் செயற்பாடுகளில் ஒரு மாதம் தொடர்ச்சியாக பங்களிப்புச் செய்வதற்கு முஸ்லிம் எய்ட் தீர்மானித்துள்ளது

LEAVE A REPLY