சுவிட்சர்லாந்தில் அகதிகளை ஏற்காத கிராமத்துக்கு அபராதம்

0
93

201605301242015645_Fined-Rs-2-crore-to-the-village-of-refugees-in-Switzerland_SECVPFசிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் அடைய அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் 26 ஐரோப்பிய நாடுகளும் 50 ஆயிரம் அகதிகளை ஏற்றுக் கொண்டு அவர்களை தங்க அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதை ஏற்று சுவிட்சர்லாந்து அரசு அகதிகளை எற்று தங்கவைத்துள்ளது. இந்த நிலையில் 10 அகதிகளை அங்குள்ள ஒபாவில்-லியவி என்ற கிராமத்தில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அகதிகளை ஏற்க அக்கிராமத்தினர் மறுத்து விட்டனர்.

எனவே, அக்கிராமத்துக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 2,200 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் 300 பேர் கோடீசுவரர்கள்.

அவர்கள் அகதிகள் வருகையை விரும்பவில்லை. கடுமையாக உழைத்து இக்கிராமத்தை முன்னேற்றி இருக்கிறோம். அன்புடன் வாழ்கிறோம். அந்த சூழ்நிலையை கெடுக்க விரும்பவில்லை. அவர்கள் எங்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். அபராதம்கட்ட தயார் என அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY