காத்தான்குடியில் முதலமைச்சரின் அடிக்கல் நாட்டு விழா இடை நிறுத்தம்

0
182

(முஹம்மட் பயாஸ்)

Fareed Naseerபுதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு சொந்தமான காணி ஒன்றில் அரச கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு விழாவினை நடாத்த இருந்த நிகழ்வே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் போது அப்பள்ளிவாயலின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.எல்.எம். பரீட் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

“புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமான காணி ஒன்றில் பாத்திமா பாலிகா என்ற பாடசாலையை நிறுவுவதற்காக நிறுவாகத்தினர் வேண்டிக்கொண்டதற்கினங்க பள்ளிவாயலுக்கு சொந்தமான காணி ஒன்றை தற்காலிகமாக வழங்கி இருந்தோம்.

ஆனால் இக்காணிக்குள் கிழக்கு முதலமைச்சர் எவ்வித அனுமதியுமின்றி அத்து மீறி அரச கட்டிடமொன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவினை நடாத்த இருந்தார். அதனை நாங்கள் அனுமதிப்பதில்லை என அவசரமாக எங்கள் பள்ளிவாயல் நிறுவாகத்தினர் கூடி முடிவு செய்திருக்கின்றார்கள்.

எனவே, நான் கிழக்கு முதலமைச்சரிடம் வண்மையாக கேட்டுக்கொள்வது இவ்வாறு தனியார் காணிக்குள் அத்து மீறி அரச கட்டிடங்களை கட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், அதே போல் இப்பாடசாலைக்கு முன்பாக இருக்கின்ற சிறுவர் பூங்கா, இதுவும் ஒரு தனியாருக்கு இடம், அதனையும் உடைத்து எறிந்து விட்டு அக்காணியிலும் அத்து மீறி அடிக்கல் நாட்ட இருந்ததாகவும் அதனையும் அக்கானிக்கு சொந்தக்காரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளை வண்மையாக கண்டிக்கின்றேன். நீங்கள் நிறுத்திக்கொள்ளுங்கள் காத்தான்குடிக்கு பல அபிவிருத்தி தேவைகள் இருக்கின்றது. அதனை ஊரின் அமைச்சர் மற்றும் ஏனையோர் செய்து வருகின்றனர். இவ்வாறு அத்துமீறி அரசியல் தேவைக்காக இவ்வாறு பயன்படுத்தப்படுகின்ற அதிகார துஸ்பிரயோகத்தை வண்மையாக கண்டிக்கின்றேன்.

சுமார் 1200 இற்கு மேற்பட்ட குடும்பங்களை கொண்ட பள்ளிவாயலுக்குரிய இச்சிறிய காணியில் அத்து மீறி அடிக்கல் நாட்டுவதை அணுமதிக்க முடியாது. இதற்குப் பிறகாவது முதலமைச்சரும் அவரைச்சார்ந்த சகோ. சிப்லியும் இயங்க கூடாது என்பதை வினயமாக கேட்டுக்கொள்வதோடு இது பள்ளிவாயலுக்குச் சொந்தமான காணி, இது தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.

எனவே இக்காணியையும் பாடசாலையிடம் இருந்து விரைவாக மீட்பதற்க்கு பள்ளிவாயல் நிருவாகத்தினர் துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு தயவு செய்து இவ்வாறான செயற்பாடுகளில் முதலமைச்சர் ஈடுபடக்கூடாது எனவும் இவ்வாறான செயற்பாடுகளை தான் இப்பள்ளிவாயலின் தலைவர் என்கின்ற ரீதியில் வண்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY