ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கிராமங்களை ஏறாவூர்ப் பற்று சுகாதார அலுவலகத்துடன் இணைக்க எடுக்கும் முயற்சிபற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார அமைச்சு பணிப்பு

0
146

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நிருவகிக்கப்பட்டு வரும் கிராமங்களை ஏறாவூர்ப் பற்று சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுடன் இணைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மது நஸீர் பிராந்திய சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளைக் கேட்டுள்ளார்.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவினால் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பராமரிக்கப்பட்டு வரும் மீராகேணி, மிச்நகர், ஐயன்கேணி ஆகிய கிராமங்களை ஏறாவூர்ப்பற்று சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் கீழ் கொண்டு வருவதற்கு சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை ஆட்சேபித்து ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தது.

பிரதேச மக்களின் நலன் கருதி ஏறாவூர் நகர சுகாதார அதிகாரிப் பிரிவு நிருவாகத்தின் கீழுள்ள கிராமங்களை ஏறாவூர்ப் பற்று சகாதாரப் பணிமனை நிருவாகத்தின் கீழ் இணைப்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகளைக் கைவிட அறிவுறுத்துமாறு சம்மேளனம் அமைச்சரைக் கேட்டிருந்தது.

இந்த விடயம் குறித்தே விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுகாதாரத் தணைக்கள அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

LEAVE A REPLY