மூடப்படாத நீர்க்குழியில் விழுந்து குழந்தை மரணம்

0
106

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

child death bodyபராமரிக்கப்படாமலும் மூடப்படாமலும் இருந்த நீர்க்குழியில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை பலியாகியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த கஜேந்திரன் தர்சாந்த் (வயது 18 மாதங்கள்) என்ற குழந்தையே நீர்க்குழியில் வீழ்ந்து மரணித்துள்ளது.

நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

நேற்று மாலை 5 மணியளவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என்று பெற்றோர் தேடியபோது குழந்தை வீட்டு வளவில் தோண்டப்பட்டு மூடப்படாது சமீபத்திய மழையில் நீர் நிரம்பியிருந்த குழியில் விழுந்து கிடந்தவாறு மீட்கப்பட்டுள்ளது. மாலை 6.30 மணியளவிலேயே நீர்க்குழியிலிருந்து சடலத்தை மீட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் பிரதேச பரிசோதனைக்காக தோப்பூர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மூதூர் பொலிஸார் இச்சம்பற்றிய மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY