கிளிநொச்சியில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு

0
88

istock_news_imageகிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியில் இருந்து ஒரு தொகை வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

10 கிளைமோர் குண்டுகள், 65 கைக்குண்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகள் போன்றவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இராணுவத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அப் பகுதியிலிருந்த கிணறு ஒன்றில் இருந்து இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

#Adaderana

LEAVE A REPLY