சவூதி ரியாத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய ஒன்றுகூடல்

0
144

(அபூ உமர்)

fghகடந்த 27.05.2016 வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆத் தொழுகை முதல் மக்ரிப் தொழுகை வரை தமிழ் மொழியிலான இஸ்லமாமிய ஒன்றுகூடல், ஸவூதி ரியாத் நகரின் காதிஸிய்யா பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதில ரியாத் வாழ் இலங்கை, இந்திய தமிழ் மொழிபேசும் குடும்பங்கள், ஆண்கள், பெண்கள் என அதிகமானவர்கள் களந்து சிறப்பித்தனர்.

இது ரியாதிலுள்ள இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் அழைப்பாளர்கள் ஒன்றுணைந்து, டல்லா இஸ்லாமிய அழைப்பு நிலையத்தின் பிரதான அனுசரனையுடன் இடம்பெற்றது.

இதில் முக்கிய உரையாக “இறைவணக்கத்துக்காக ரமழானை வரவேற்போம்” எனும் தலைப்பில் அல்பத்ஹா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி நிலையத்தின் அழைப்பாளரும் மெளலவியுமான நூஹ் அல்தாபி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

fgஇன்னும் பெண்களுக்கு, சிறார்களுக்கு என அனைத்து பிரிவினருக்குமாக தனித்தனியே போட்டிகள், குர்ஆன் விளக்கம், இமாம்கள் அறிமுகம், தர்பிய்யா நிகழ்ச்சி என பல இஸ்லாமிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இவ்வாறான நிழ்ச்சி மாதாந்தம் இடம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதை நல்லமுறையில் நிகழ்த்துவதற்கும் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும் கிருபையும் கிட்ட வேண்டும்.

LEAVE A REPLY