வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு காத்தான்குடி மீடியா போரத்தினால் நிதியுதவி

0
138

(விஷேட நிருபர்)

KMF NM. Ameenவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு காத்தான்குடி மீடியா போரத்தினால் சேகரிக்கப்பட்ட நிதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீனிடம் நேற்று முன்தினம் (28) சனிக்கிழமை மாலை கையளிக்கப்பட்டது.

காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல். டீன் பைறூஸ் மற்றும் காத்தான்குடி மீடியா போரத்தின் நிருவாக சபை உறுப்பினர் யு.எல்.எம்.சபீக் ஆகிய இருவரும் இந்த நிதியினை கையளித்தனர்.

இதன் போது 26,500 ரூபா பணம் கையளிக்கப்பட்டதாக காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல். டீன் பைறூஸ் தெரிவித்தார்.

இந்த நிதி காத்தான்குடி மீடியா போரத்திலுள்ள அங்கத்தவர்களிடையே சேகரிக்கப்பட்டதாகும்.

அன்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்து அகதி முகாம்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.

இந்த பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு காத்தான்குடி மீடியா போரத்திலுள்ள உறுப்பினர்கள் முன் வந்து இந்த சிறிய நிதிப்பங்களிப்பினை செய்திருந்தார்கள்.

அதற்காக காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல். டீன் பைறூஸ் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் என்பவர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பணியினை சமூகம் மறந்து விடக் கூடாது. இவ்வாறான அனர்த்தங்களினால் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்படும் போது அவர்களையும் சமூகம் திரும்பிப்பார்க்க வேண்டும்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த ஊடகவியலாளர்கள் இந்த நாட்டிலுள்ள முக்கிய ஊடக நிறுவனங்களில் ஊடகவியாளர்களாக பணியாற்றுகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Deen Fairoos (KMF) NM. Ameen

LEAVE A REPLY