பிரபல உணவகமொன்றில் சுத்தமற்ற உணவுகள் விற்பனை

0
628

13296319_10206788964588352_1720409441_nஇவ்வுலகில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் உணவு மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாட உணவுக்காகவே மனிதர்கள் மிகவும் கடினத்துடன் உழைக்கிறார்கள் மனிதனுக்கு உணவு மிக அத்தியவசியமான ஒன்றாகவே காணப்படுகிறது.

அன்றாடம் உண்ணும் உணவு சுவையானதாகவும், சுத்தமானதாகவும், இருக்கவேண்டும் என்பது அனைவரும் விரும்பும் ஒரு முகியவிடையம். பல மனிதர்கள் தாங்களின் பிரயாணத்தின் போது ஹோட்டல் உணவை உட் கொள்வது வழக்கம் அவ்வாறான மனிதர்கள் பசிக்காக மட்டும் அல்லாது சுத்தத்தையும் பார்த்தே உணவு உண்ண செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

உணவின் தரத்தை பொருத்தே உணவகத்தை மக்கள் மதிப்பிடுகின்றனர். சுத்தம், சுவை, உபசரிப்பு மற்றும் உணவின் நம்பகத்தன்மை போன்றவை இருந்தால் மட்டுமே அவ்வுணவகம்  நீண்ட நாட்கள் நிலைதிருப்பதோடு அதன் வியாபாரமும் சிறப்பாக அமயப்பெரும்.

அந்த வகையில் பிரயாணத்தின் போது செல்லும் மக்கள் பசியோடு அலைந்து களைத்து போவதனால் நல்ல உணவகங்களை தேடி செல்கின்றார்கள். ஆனால் சில உணவகங்கள் மக்களுக்கு நோயினை உண்டாக்கக் கூடியவாறு செயல்படுகிறது.

இன்று ஞாயிற்று (29) பகல் உணவு சாப்பிடுவதற்காக சில சகோதரர்கள் மினுவாங்கொட பகுதியின் பண்டாரனயக சர்வதேச விமான நிலையம் செல்லும் வீதியில் அமைந்துள்ள “நியூ பவ்ஸ் ஹோட்டலிற்கு” சென்றுள்ளார்கள். சாப்பிடுவதற்காக 2 பிரியானி ஒர்டர் செய்து பின்னர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த உணவை சாப்பிட்டி கொண்டு இருக்கும் போது அவ்வுணவில் ஈ (கொசு) கிடந்ததை அவதானித்தார்கள். அவர்கள் அவதானித்ததை அங்குள்ள உணவு பரிமாறுவரிடம் கூறிய போது அவர் பொருட்படுத்தவில்லை ஈ (கொசு) தானே தெறியாமல் விழுந்து இருக்களாம் என்று சாதாரனமாக கூறிச் சென்றுள்ளார்.

சாப்பாட்டில் ஈ இன்று விழலாம், நாளை கரப்பான் பூச்சியும் விழலாம், ஏன் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய ஏதாவது ஒன்று உணவில் விழுந்தால் இவ்வாறு சாதாரனமாக விடலாமா.? எனக் கேட்டதற்கு அவர் விரும்பினால் சாப்பிடுங்கள் இல்லையென்றால் சென்றுவிடுங்கள் என சுயநலமிக்கதாக அவர் பதிலளித்துள்ளார்.

அதன்பின்னர் சாப்பிட சென்றவர்கள் சாப்பிட விருப்பமில்லாமல் இடை நடுவே எழுந்து செல்லும் போது குறிந்த ஹோட்டலில் முன்புறமாக விற்பனை செய்யப்பட  சிறுவர்கள் சாப்பிடக்கூடிய சொக்லேட் டை வாங்கியிருக்கின்றார்கள். ஆனால் அந்தச் சொக்கலேட்கூட  சரியான முறையில் இல்லாமல் பழுதடைந்த சொக்லேட் டாக காணப்பட்டது.

அதற்கும் அதை வாங்கிய அதே உணவகத்தின் பொறுப்பாளரிடம் இது பழுதடைந்துள்ளது என கேட்டதற்கு, இதுதான் இருக்கிறது விரும்பினா வாங்குங்கள் இல்லாவிடில் வேறு என்கசரி வாங்குங்கள் என பொடுபோக்கு தனமான பதிலொன்றை கூறியுள்ளார்.

இவாறு பொறுப்பற்ற முறையில் பதில் கூறியமையால் இச்சம்பவத்திற்கு முகம்கொடுத்த சகோதர்கள் அங்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் சொக்கலேட் போன்றவற்றை படம் பிடித்து மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக எமது செய்திச் சேவைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

எனவே, இப்படியான சுத்தமற்ற உணவகங்களை மக்கள் புறக்கணிப்பதோடு இவ்வாறான விடயங்களை சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஹோட்டலுக்கும் உணவு தரத்தை சோதிக்கும் திட்டத்தைத்தை உயிரோட்டமுள்ளதாக மாற்றி செயல்படுத்த வேண்டும்.

சுகாதார பரிசோதகர்கள் சிலர் பொடுபோக்காக கண்டும் காணாமலும் செயல்படுவதால்தான் இவ்வாறான உணவகங்கள் மற்றும் உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் இவ்வாறு பழுதடைந்த உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய சுத்தமற்ற உணவுகளை அவர்கள் தைரியமாக விற்பனை செய்கின்றார்கள்.

சுகாதார பரிசோதகர்கள் உரிய நடவெடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் சுகாதார வாழ்வுக்காக அரசினால் நியமிக்கப்பட்ட சுகாதார அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்காக.

நன்றி: Aida Iffath

13296305_10206788963668329_1638086261_n

13329659_10206788966428398_1213730625_n

13336288_10206788958788207_728267185_n

13342175_10206788961148266_1975204115_n

13296266_10206788965708380_396793299_n

LEAVE A REPLY