உக்ரைனில் முதியவர்கள் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு

0
80

201605291437090354_At-least-16-die-in-fire-at-Ukraine-home-for-elderly-Official_SECVPFஉக்ரைன் தலைநகர் கீவ் அருகேவுள்ள கிரமாம் ஒன்றில் உள்ள முதியவர் இல்லத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 35 பேர் இருந்த அந்த கட்டிடத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.

அவசர சேவை மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அவசரநிலை அமைச்சகம் தெரிவித்துள்ளாது.

விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதியவர்கள் 16 பேர் உயிரிழந்த இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் விளாதிமீர் குரோஸ்மேன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY