ஏறாவூர் பெண் சந்தை அபிவிருத்திக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் அடிக்கல் நாட்டிவைப்பு

0
184

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC05040மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது வசதிகள் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் பெண் சந்தைக் கட்டிடத் தொகுதியை புனர் நிர்மாணம் செய்வதற்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் ஞாயிறன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பொருள் விற்பனையிலும் கொள்வனவிலும் ஈடுபடும் பெண்களுக்கான ஒரேயொரு சந்தையாக இது இருந்தபோதும் கடந்த தசாப்தங்களுக்கு மேலாக இந்த சந்தைக் கட்டிடம் உள்ளுராட்சி நிருவாகத்தினரால் திருத்தியமைக்கப்படவில்லை என்று அங்கு வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததை அடுத்து திருத்த வேலைக்கான நிதி முதலமைச்சரால் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டப்பட்ட ஏறாவூர் பெண் சந்தைக் கட்டிட புனரமைப்புப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளைப் பணித்தார்.

DSC05034 Ladies Market Eravur

LEAVE A REPLY