மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைவஸ்துப் பாவனை, விற்பனை அதிகரித்துக் காணப்படுகிறது: எம்.எஸ்.சுபைர்

0
232

(றிசாத் ஏ. காதர்)

MS. Subair MPCமட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைவஸ்துப் பாவனைகள், போதைவஸ்து விற்பனை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனை ஒழித்துக்கட்டுவதற்கு பொதுமக்கள் பொலிசாருக்கு உதவியாக செயற்பட வேண்டுமெனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் நஜ்முல் உலூம் சர்வதேச பாடசாலைக்கு ஒரு தொகுதி தளபாடங்களை (28) நேற்று கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைவஸ்து விற்பனை மற்றும் போதைவஸ்து பாவனை அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் தற்போது சட்டபூர்வமான மது, சிகரட் மூலம் அரசாங்கத்திற்கு அதிகமான வரி கிடைக்கும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இரணடாம், மூன்றாம் இடங்களிலுள்ளது. முதலாவது மாவட்டமாக யாழ்ப்பாணம் திகழ்கிறது ஆகவே போதைவஸ்துப் பாவனைக்கு அடிமைப்பட்டு எமது இளைஞர் சமூகம் மிக மோசமாக பாதிக்கப்படுகின்ற நிலைமைகளை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக இன்று எமது முஸ்லீம் இளைஞர்களிலும் இந்த போதைவஸ்து வியாபாரம் நிலைகொண்டுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எமது பாகுதிகள்pன் ஒரு பிரதேசத்தில் கேரளா கஞ்சா இன்னுமொரு பிரதேசத்தில் ஹெரோயின், மற்றுமொரு பிரதேசத்தில் போதைவஸ்து மாத்திரைகளும் விற்பனை செய்யுமளவிற்கு நிலமைகள் மாறி பாடசாலை மாணவர் இதற்கு அடிமையாகும் காலம்கட்டம் தற்போது உறுவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் பேதைவஸ்து விற்பனை தொடர்பிலும் அண்மையில் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே, இது எமது மாவட்டத்தில் சமூகச் சீரழிவை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாக மாறியுள்ளது. இப்போதைவஸ்து பாவனையை இல்லாதொழிப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கிருக்கின்றது எனவே இவ்விடயத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருப்பதுடன் பொலிசாருக்கும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இன்று எமது நாட்டில் மதுபானம், சிகரட் போன்றவற்றிற்கான வருடாந்த வரியாக 115பில்லியன் அரசுக்கு கிடைக்கின்றது, இப்போதைவஸ்து பாவனையால் வருடத்திற்கு 40,000பேர் மரணிக்கின்றனர் குறிப்பாக மலையகத்தில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய வருமானத்தில் 1/3 பகுதியினை மதுவுக்கு செலவு செய்கின்றனர் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே, இந்தப் போதை வஸ்து பாவனைகள் எமது மாவட்டத்தில் வளர்ந்து வரும் இளைஞர் சமூகத்தினை பாதிக்கக்கூடும் இதிலிருந்து பாதுகாப்புப் பெற பாடசாலைகள் , அரச திpணைக்களங்கள் தனியார் நிறுவனங்கள், மதரீதியான அமைப்புக்கள் சுகாதார தரப்பினருடன் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை ஒழிப்பு வியடத்தில் பொலிசாரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது அதே போன்று ஏறாவூர் பிரதேசத்திலும் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் போதைவஸ்து விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுமுள்ளனர்.

எனவே எதிர்காலத்தில் பொது மக்கள் பொலிசாருக்கு மேலும் இது விடயத்தில் உதவியாக இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY