101 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

0
12

244113இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 101 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 27ம் திகதி ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி அந்த அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 498 ஓட்டங்களைப் பெற்ற வேளை, தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது.

244123அந்த அணி சார்பாக சிறப்பாக ஆடிய முஈன் அலி ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களை குவிக்க அலக்ஸ் ஹெலிஸ் (Alex Hales) 83 ஓட்டங்களையும் ரூட் 80 ஓட்டங்களையும் விளாசினர்.

இதனையடுத்து, தனது முதலாவது இன்னிங்சில் விளையாட ஆரம்பித்த இலங்கை அணி, 43.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 101 ஓட்டங்களைப் பெற்ற வேளை அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.

இதன்படி, 397 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருக்க மீண்டும் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாட களமிறங்கியுள்ளது.

#Adaderana

244125

LEAVE A REPLY