(Photos & Full Detail) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் நிருவாகத் தெரிவு

0
21

(எம்.எச்.எம். அன்வர்)

Thowfeek Engineer 1காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் 2016/2017 ம் ஆண்டுக்கான புதிய நிருவாகம் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பள்ளிவாயலில் தலைவர் றவூப் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

மௌலவி எம்.ஏ.எம். மசூத் அஹமட் ஹாஷிமியின் கிராஅத்துடன் ஆரம்பமான இக்கூட்டத்தில் சென்ற ஆண்டுக்கான கணக்கறிக்கை மற்றும் செயற்பாட்டறிக்கை வாசிக்கப்பட்டு சபையோரால் அனுமதியளிக்கப்பட்டது.

சம்மேளனத்தால் நியமிக்கப்பட்டுள்ள கணக்கு பரிசோதகரும் மாகாண கணக்காளருமான எம்.ஏ.எம். சுஹைரினால் கணக்கு பரிசோதிக்கப்பட்டு எதிர்காலத்தில் பொது நிறுவனங்களுக்கான சில செலவுகளை குறைக்குமாறு ஆலோசனை தெரிவித்து கணக்கறிக்கை சரியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிருவாக உறுப்பினர்கள் விபரம்,

புதிய தலைவராக காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவரும் பொறியியலாளருமான ஏ.எம்.எம். தௌபீக் தெரிவு செய்யப்பட்டார்.

தெரிவுசெய்யப்பட்ட புதிய நிருவாகம்

செயலாளர்: ஏ.எல்.எம். சபீல் நளீமி
பிரதித் தலைவர்: சட்டத்தரணி ஏ.எல். அப்துல் ஜவாத்
பொருளாளர்: ஏ.பி.எம். முனாஸ் (தற்காலிகம்)
உப செயலாளர்கள்: எம்.எம். றமீஸ் (ஜமாலி) மற்றும் எம்.ஏ. ஜவ்பர்
உபபொருளாளர்: றவூப் ஏ. மஜீத்
ஆகியோர் ஏகமாதாக தெரிவு செய்யப்பட்டனர்.

Mashood Hashimi Rauf A Majeed Shabeel Naleemi DSC01238 DSC01241 DSC01245 DSC01233

LEAVE A REPLY