இன்று இரவு இடியுடன் கூடிய கடும் மழை.!

0
125

cycloneநாட்டின் வட மத்திய, மத்திய, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென்மேற்கு பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு பூராகவும் மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களிலும் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் தெரிவித்துள்ளது.

இதனால் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடுமெனவும் பிரதான ஆறுகளை அண்டி வாழ்பவர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நில்வளா, களு, ஜின் கங்கைகளும் அத்தனகலு ஓயாவிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அதன் மையங்கள் தெரிவித்துள்ளன.

கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை மற்றும் களுத்தறை மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் நிலம் கீழிறங்கும் அபாயங்கள் தொடர்ந்தும் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

#Virakesari

LEAVE A REPLY