(Photos) மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகளை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று பார்வை

0
17

(எம்.எஸ்.எம். சுஜா)

IMG_0285இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்சியில் மிகப்பாரிய அளவில் நிர்மானிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களாக துரிதப்படுத்தப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றது.

இன் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த பல்கலைக்கழகத்திற்காக ஆரம்பித்து வைக்கப்பட்ட பள்ளிவாயல் மற்றும் நூலக கட்டிடங்களுக்கான ஆரம்ப கட்டுமானப் பணிகளை இன்று (29) காலை புனர்வாழ்வு புனரமைப்பு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் சிறிலங்கா ஹிறா பெளண்டேஷனின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த பல்கலைக்கழகத்துக்கான ஏனைய கட்டடங்களையும் பார்வையிட்ட அவர் எஞ்சியிருக்கும் முக்கிய பணிகள் தொடர்பாகவும் பொறியியலாளர்களுடன் கலந்துரையாடினார்.

IMG_0281 IMG_0283 IMG_0284

LEAVE A REPLY