(Photos) மோட்டார் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

0
40

(எம்.ரி.எம்.யூனுஸ்)

IMG_20160529_094548-மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி குருக்கள்மட பிரதேசத்தில் மோட்டார் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து அணைக்கட்டுடன் மோதுண்டதில் இறக்காமப் பிரதேசத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் படுகாயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறக்காமத்திலிருந்து மூதூர் நோக்கி சென்ற இளைஞர்களே விபத்தில் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை காலை 09.50 மணியளவில் விபத்துக்குள்ளாகினர்.

இறக்காமத்தை சேர்ந்த சியான் (22) மற்றும் (21) சஜித் ஆகியோரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_20160529_094611-1024x575 IMG_20160529_094625-1024x575 IMG_20160529_094632-1024x575 IMG_20160529_094640-1024x575 IMG_20160529_094653-1024x575

LEAVE A REPLY