அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 66வது வருடாந்த மாநாடு

0
216

(அஷ்ரப் ஏ. சமத்)

6அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 66வது வருடாந்த மாநாடு நேற்று (28) கொழும்பு -03ல் உள்ள சுற்றுலாத்துறை பயிற்சிக் கல்லுாாியின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைவா் சாதீக் எம். சலீம் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக பாராளுமன்றத்தின் சாபாநயகா் கரு ஜயசூரிய கலந்து கொண்டாா். அத்துடன் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசியும் கலந்து சிறப்பித்தாா்.

இந் நிகழ்வில் ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளா் அகாா் முகம்மத், சிங்கள மொழி மூலம் இஸ்லாமிய சட்டம் பற்றி எழுதிய சிரேஸ்ட சட்த்தரணி கருனாரத்தின ஆகியோறும் கௌரவிக்கப்பட்டனா். அத்துடன் வை.எம்.எம்.ஏ யின் சிறந்த கிளைகளக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகா் கரு ஜயசூரிய,

கடந்த 66 வருடங்களாக இயங்கி வரும் வை.எம்.எம்.ஏ இயக்கம் இந்த நாட்டில் பல்வேறு மனிதாபிமான உதவிகளையும், இன ஜக்கியம் எனபவனவற்றை அரசியலுக்கப்பால் சென்று சேவை செய்து வரும் ஒரு பழமை வாய்ந்ததொரு ஸ்தாபணமாகும். இதனை காலம் சென்ற கலாநிதி ஏ.எம்.ஏ. அசீஸ் அவா்கள் ஆரம்பித்துள்ளாா்கள்.

இவ் இயக்கம் இந்த நாட்டில் வாழும் மூவினங்களுக்கும் வருமை, கல்வி, தொழில் பயிற்சி, இயற்கை அணா்த்தம் இளைஞா் தலமைத்துவம், இஸ்லாமிய வழிகாட்டல் பெண்கள் தலைமைத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் நாட்டில் நாலா பாகங்களிலும் தமது கிளைகள் ஊடாக பாரிய சேவையளித்து வருவதையிட்டு நாம் நன்றி பாராட்டுவதாகவும் சபாநாயகா் அங்கு உரையாற்றினாா்.

5 10

LEAVE A REPLY