இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வர்த்தக கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

0
171

(எம்.ரி.எம்.யூனுஸ்)

IMG-20160528-WA0003காங்கேயனோடை ஜாமிஉல் மஸ்ஜித் பள்ளிவாயலின் வர்த்தகக் கட்டடத்தொகுதி, சிறுவர் பூங்கா, ஹவ்ழ் ஆகியவை இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் இன்று (28) திறந்துவைக்கப்பட்டது.

ஸ்ரீ லாங்கா ஹிறா பெளண்டேஷனின் தலைவரும் புனர்வாழ்வு புனரமைப்பு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பூரண முயற்சியில் ஸ்ரீ லங்கா ஹிரா பெளண்டேஷனின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனியின் வழிகாட்டலில் இன்று மாலை காங்கேயனோடை ஜாமிஉல் மஸ்ஜித் பள்ளிவாயலின் வர்த்தகக் கட்டடத்தொகுதி, சிறுவர் பூங்கா, ஹவ்ழ் ஆகியவற்றின் கட்டிடப் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டு நிருவாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் காத்தான்குடியின் முன்னாள் நகர முதல்வர் அஸ்பர், ஸ்ரீ லங்கா ஹிரா பெளண்டேஷனின் கட்டட நிர்மானப் பொறுப்பாளர் எம்.எஸ்.எம்.நெளஷாட் உட்பட ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG-20160528-WA0002

LEAVE A REPLY