நாட்டில் வக்பு சட்டத்தை இல்லாமல் செய்யவேண்டும்: அக்மீமன தேரர்

0
468

akmemana_dayarathna1நாட்டில் வக்பு சட்டம் என்று ஒன்­றி­ருப்­ப­தி­னாலே நினைத்த இடங்­க­ளி­லெல்லாம் முஸ்­லிம்கள் பள்­ளி­வா­சல்­களை நிர்­மா­ணித்துக் கொள்­கி­றார்கள். தெஹி­வ­ளையில் மாத்­திரம் 17 பள்­ளி­வா­சல்கள் பன்­ச­லைகள் இருக்கும் பகு­தி­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன.

எனவே வக்பு சட்­டத்தை இல்­லாமற் செய்ய வேண்டும் என சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

தெஹி­வளை பாத்யா மாவத்தை பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு எதிர்ப்பு வெளி­யி­டு­வ­தற்­கான கார­ணத்தை விளக்­கு­கை­யி­லேயே இவ்­வாறு கூறினார். தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில், பள்­ளி­வா­சல்கள் பன்­ச­லை­க­ளுக்கு அண்­மை­யிலும் பௌத்­தர்கள் வாழும் பிர­தே­சங்­க­ளிலும் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தாலும் விஸ்­த­ரிக்­கப்­ப­டு­வ­தாலும் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன.

அப்­பி­ர­தே­சங்­களில் வாழும் மக்கள் எதிர்ப்புத் தெரி­விக்­கி­றார்கள். பன்­ச­லை­களில் பிரித் ஓதும் போதும் பள்­ளி­வா­சல்­களில் பாங்கு சொல்லும் போதும் பிரச்­சி­னைகள் உரு­வா­கின்­றன.

பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்­புக்கு சட்­ட­ரீ­தி­யான அனு­மதி பெற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தாலும் அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள மக்கள் எதிர்ப்பு வெளி­யிட்டால் விஸ்­த­ரிப்பு பணி­களை முன்­னெ­டுக்க முடி­யாது.

தெஹி­வ­ளையில் முஸ்­லிம்கள் வாழாத பகு­தி­களில் கூட பள்­ளி­வா­சல்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

முதலில் மத்­ரஸா என பதிவு செய்து கொண்டு சம­யப்­பா­ட­சா­லையை ஆரம்­பிக்கும் முஸ்­லிம்கள் அங்கு தொழு­கையை நடாத்தி சில காலத்தில் அதனை பள்­ளி­வா­ச­லாக மாற்றிக் கொள்­கி­றார்கள். சம­ய­ரீ­தி­யான சட்­டங்கள் எமது நாட்டில் அமுலில் உள்­ள­த­னாலே இவ்­வா­றான பிரச்­சி­னைகள் உரு­வா­கின்­றன.

எனவே நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க வேண்­டு­மாயின் அர­சாங்கம் சம­ய­ரீ­தி­யான சட்­டங்­களை இல்­லாமற் செய்­வது பற்றி சிந்­திக்க வேண்டும் என்றார்.

தெஹி­வளை பாத்யா வீதியில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்பு பணிக்கு அப்­ப­கு­தியைச் சேர்ந்த பெரும்­பான்மை மக்­களும் தேரர்­களும் கடும் எதிர்ப்­பினைத் தெரி­வித்து வரு­வ­துடன் பொலி­ஸிலும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல் நிர்மாணப்பணிக்கான சட்டரீதியான அனுமதிப்பத்திரத்தை பொலிஸாரிடம் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சமர்ப்பித்தும் பொலிஸார் பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிக்கு தடைவிதித்துள்ளனர்.

-Vidivelli-

LEAVE A REPLY