பிரதமர் தென் கொரியாவிற்கு விஜயம்

0
160

ranil wickramasinghe_CIபிரதமர் ரணில் விக்ரமசிங்க தென் கொரியாவிற்கான விஜயத்தை இன்றைய தினம் ஆரம்பித்துள்ளார்.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் நடைபெறவுள்ள ரோட்டரி கழகத்தின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

நாளை முதல் எதிர்வரும் 29ம் திகதி வரையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

160 நாடுகளைச் சேர்ந்த 50,000 உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த மாநாட்டில் விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளார்.

LEAVE A REPLY