இலங்கைக்கு வருகிறது அதிவேக இணைய 5G தொழில்நுட்பம்

0
123

5Gஇலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குறித்த பரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடனே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழிநுட்ப அமைச்சரான ஹரின் பெர்னான்டோ மற்றும் குறித்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேகம் 4ஜி சேவையில் ஒரு திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய அதிகபட்சம் 8 நிமிடங்கள் வரை ஆகும் நிலையில் சீரான 5ஜி கனெக்ஷனில் நொடிகளில் திரைப்படத்தை பதிவிறக்கம் செய்திட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY