அகதிகளின் படகு விபத்தில் 45 பேரின் சடலங்கள் இதுவரை மீட்பு

0
152

201605280520151719_45-bodies-found-after-Fridays-migrant-shipwreck-Italian_SECVPFமத்திய தரைக்கடல் அருகே அகதிகளின் படகு விபத்துக்குள்ளாதில், இதுவரை 45 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலி கடற்படை தெரிவித்துள்ளது.

லிபியா உள்பட சில நாடுகளில் நடந்துவரும் உள்நாட்டு போர் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் படகுகள் மூலம் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், சுமார் 100 பேர் லிபியாவில் இருந்து இத்தாலிக்கு ஒரு படகில் மத்தியதரைக்கடலில் சென்று கொண்டிருந்தனர்.

லிபியா கடலில் இருந்து 35 நாட்டிக்கல் மைல் தூரம் சென்றதும் அந்த படகு அதிகமான ஆட்கள் காரணமாக ஒரு பக்கமாக சாய்ந்தது. சிறிது நேரத்தில் அந்த படகு கடலில் கவிழ்ந்து மூழ்கத் தொடங்கியது. இதனால் படகில் இருந்தவர்கள் கடல் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

கைகளை அசைத்து உதவிக்கு அழைத்துக் கொண்டிருந்தனர். இதனை அந்த கடல் பகுதியில் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஸ்பெயின் நாட்டின் கடற்படை மற்றும் இத்தாலி கடற்படை கப்பல்கள் கவனித்து அந்த பகுதிக்கு விரைந்து சென்றன.

கடற்படை படகில் இருந்தவர்கள் கடலில் தத்தளித்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், “இதுவரை சுமார் 135 பேர் இதுவரை இத்தாலி கப்பல் படையினர் மீட்டுள்ளதாகவும், 45 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களில் நடைபெற்ற மூன்றாவது பெரிய கப்பல் விபத்தாக இது கருதப்படுகிறது. மேலும் பலரை காணவில்லை என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நேற்று மட்டும் மீட்பு பணிகளில் ஆயிரத்து 900 ஆயிரம் பேர் உயிரிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 4 நாட்களில் மட்டும் லிபியா கடற்கரை அருகே சுமார் 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

3 நாட்களில் மூன்று கப்பல் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது மிகவும் வருத்தமளிப்பதாகும் என்று ரோமில் உள்ள ஐநா அகதிகள் நிறுவனம் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY