அர்ஜென்டினா முன்னாள் சர்வாதிகாரிக்கு 20 ஆண்டு ஜெயில்

0
134

201605281128251113_ExArgentine-dictator-jailed-for-20-years_SECVPFஅர்ஜென்டினாவின் கடைசி சர்வாதிகாரி ரினால்டோ பிக்னன். இவர் 1970-ம் ஆண்டுகளில் பதவி வகித்தார். அப்போது இவருக்கு எதிராக போராடிய இடதுசாரிகளை ‘கழுகு வேட்டை’ என்ற ரகசிய நடவடிக்கையின் பேரில் கொன்று குவித்தார்.

ஏராளமானவர்கள் உருகுவே, பிரேசில், சிலி, பராகுவே, மற்றும் பொலிவியாவுக்கு கடத்தப்பட்டு அங்கு கொலை செய்யப்பட்டனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ரினால்டோ பிக்னன் மற்றும் 4 ராணுவ தளபதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கி நடந்தது.

வழக்கு விசாரணை சுமார் 3 ஆண்டுகளாக நடந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் சர்வாதிகாரி ரினால்டோ பிக்னனுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

உருகுவே நாட்டின் முன்னாள் தளபதி மானுவல் கார்டெரோவுக்கு 25 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. அர்ஜென்டினாவின் ராணுவ தளபதி ஜார்ஜ் ரபேல் விடெலா விசாரணையின் போது மரணம் அடைந்து விட்டார்.

LEAVE A REPLY