சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

0
6

(றிசாத் ஏ காதர்)

65c6e62c-0998-4094-8b9d-8e4e6469fa24 (1)மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல்மின்சார நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூர் அல்லை நகரில் நேற்று வெள்ளிக் கிழமை ( 2016.05.27 ) பேரணியொன்று இடம்பெற்றது.

நிலக்கரி மூலம் செயற்படும் அனல்மின்சார நிலையத்தைக் கைவிட்டு அதற்குப் பதிலாக எரிவாய்வு (Natural Liquidate Gas ) மூலம் செயற்படும் மின்சார நிலையத்தை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முனைப்புக் காட்டிவரும் இவ்வேளையில் இந்திய அரசாங்கத்தை இவ்விடயத்தில் அதின கரிசனை காட்டுமாறு வலியுறுத்தியே இப்பேரணி இடம்பெற்றது.

இப்பேரணியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜே. எம். லாஹீர் – சிரேஷ்ட சட்டத்தரணி உட்பட தோப்பூர் அல்லை நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு அமைதியான முறையில் அனல்மின்சார நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோரிக்கை விடுத்துள்ளனர் என பேரணியை ஏற்பாடு செய்துள்ள மூதூர் பசுமைக்குழு அமைப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY