வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 30வது வருட நிறைவு விழாவில் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் உட்பட நால்வர் தங்கப் பதக்கமும்,நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிப்பு

0
171

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

88ad338f-5845-4168-a7ef-bd1b25abd7d3உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் தற்போது இயங்கிவரும் இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பிக்கப்பட்டு முப்பது வருட நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற 30வது வருட நிறைவு விழா அண்மையில் கொழும்பு பண்டார நாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் எந்திரி.புஷ்பா குணரத்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி 30 வருட நிறைவு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல அதன் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா உட்பட அமைச்சர்களான டீ.எம்.சுவாமிநாதன்,கயந்த கருநாதிலக,தயா கமகே உட்பட அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது 25 மற்றும் 30 வருடங்களாக வீதி அபிவிருத்தி அதிகார சபையில் உத்தியோகத்தர்களாக கடடையாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்திலிருந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிமனையின் மாகாணப் பணிப்பாளர் எந்திரி. வை. தர்மரெத்தினம், அதன் சாரதி எம்.சீ.யுகநாதன், அலுவலக உதவியாளர் எஸ்.ஜெயபாலன் , பிரதம இலிகிதர் பெக்ஸ் ரவிச்சந்திரா ஆகியார் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்லவினால் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சின்னம் பொறிக்கப்பட்ட தங்கப் பதக்கமும், நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0afae735-b61b-46fd-92c9-22f3808533ef

7e4be54e-3aaf-4f1a-a9b7-d9dfdbb6a318

88ad338f-5845-4168-a7ef-bd1b25abd7d3

d7b4fa64-5fa3-49a2-bb9c-da5616706192

e6319634-9211-4bad-84b9-886c0e3c7b8a

LEAVE A REPLY