முஸ்லிம் காங்கிரஸின் அனர்த்த குழுவின் துப்பரவு செய்யும் பணி பல்வேறு பகுதிகளிள்

0
159

(சபீக் ஹுஸைன்)

_05சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினால் நியமிக்கப்பட்டுள்ள அனர்த்த குழுவினர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய தினம் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ப்ரெண்டியாவத்த, வென்னவத்த, கொஹிலவத்த, வீரமல் மாவத்த, புத்கம போன்ற பிரதேசங்களில் வீடுகளை கழுவி துப்புரவு செய்யும் நடவடிக்கைகளில் காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர் .

இதில் மாகாணசபை அர்ஷாத் நிஸாம்தீன், ஆரிப் சம்சுதீன் ஆகியாரும் 120 தொண்டர் அணி 12 குழுக்கலாக பிரிந்து பல்வேறு இடங்களில் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இக்குழுவினர் கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் தங்கியிருந்து வெல்லம்பிட்டி பகுதிக்கு ஒவ்வொரு நாளும் துப்பரவு செய்யும் வேலைக்காக செல்கின்றனர்.

_01 _03 1H6A4469 1H6A4509 1H6A4540 1H6A4548 1H6A4563 1H6A4568 1H6A4570

LEAVE A REPLY