முச்சக்கரவண்டிகளின் அலகு வீத வரி அதிகரிப்பு

0
132

முச்சக்கர வண்டி மற்றும் 1000 சீசீ வலுவிற்கு மேற்பட்ட வாகனங்களின் அலகு வீத வரி நேற்று (26) இரவு முதல் அதிகரித்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரன்சிகே…

நேற்று இரவு முதல் குறைந்த பட்ச அலகு வீத வரி வாகனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .வரி கட்டமைப்பில் இது பெரும் தாக்கத்தை செலுத்தும்.1000 சீசீ இயந்திர வலு கொண்ட வாகனங்களிலிருந்து இந்த விடயம் தாக்கம் செலுத்தும்.விலை உயர்வடையும்.முச்சக்கர வண்டிக்கு வரி மாத்திரம் 4 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கும். 3.3 மில்லியனாக இருந்த Toyota Prius இன் வரி 7.2 மில்லியனாக அதிகரித்துள்ளது.பாரிய வாகனங்களின் வரி 4 மில்லியனிலிருந்து 8 மில்லியனாக அதிகரித்துள்ளது.மாருதி அல்டோவிற்கான 8 இலட்சம் ரூபா வரி 1.2 மில்லியனாக அதிகரித்துள்ளது.வான்கள் மற்றும் ட்ரக்குகளின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதுவரை அந்த வர்க்கத்திலான வாகனங்களுக்கு எந்தவித வரியும் அறிமுகம் செய்யப்படவில்லை. பழைய கட்டமைப்பே நிலவுகின்றது.இந்த கட்டமைப்பு தொடருமானால் நான் நினைக்கின்றேன் எதிர்காலத்தில் 1000 சீசீ இயந்திர வலு கொண்ட வாகனங்களின் இறக்குமதிக்கு அதிக தேவை ஏற்படும் என்று…

-NF-

LEAVE A REPLY