காத்தான்குடி மையவாடிக் காணியில் மனிதநேயம் பேணும் மகத்தான சிரமதான நிகழ்வு!

0
110

(S.சஜீத்)

999eb1f3-790a-4ca1-a587-ef44708a537bகாத்தான்குடி-05 ஜாமிஉழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமான அரப்பிக் கலாசாலை வீதியில் அமைந்து காணப்படும் மையவாடி காணியினை சிரமதானம் செய்யும் நிகழ்வு மௌலவி இமாமுதீனின் தலைமையில் (27.05.2016) வெள்ளிக்கிழமை இன்று காலை 6.00 மணிமுதல் 10.00 வரை மனிதநேயம் பேணும் மகத்தான சிரமதான நிகழ்வொன்று நடைபெற்று முடிந்தன.

இதன்போது மையவாடியி முன்தருவாயில் காணப்பட்ட களிவுகளை அகற்றி இஸ்லாமிய ஏகத்துவ முகநூல் பக்கத்தின் ஏற்பாட்டில் மனிதநேயம் பேணும் மகத்தான இப் பணியின் போது திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகள் உள்ளடங்கிய பதாதைகளும் பொருத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சிரமதான நிகழ்வில் கலந்துகொண்ட சகோதரர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக!!!

குறித்த இச் சிரமதான நிகழ்வுவானது தொடர்ச்சியாக வாரா வாரம் வெள்ளிக்கிழமை நாட்களில் குறிப்பிட்ட மையவாடி காணியில் மௌலவி இமாமுதீனின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன. எனவே தாங்களும் தவறாது கலந்து கொள்ள முயற்சிக்கவும்!

5aac5447-426b-451f-8d70-b14a73ba0bd3

192fd614-ed77-4e2b-8a70-b22512fae2a6

438ccc13-3664-480b-b912-cec126a43656

999eb1f3-790a-4ca1-a587-ef44708a537b

515322a6-5b1c-4e25-9fc9-f4d5937e85c5

LEAVE A REPLY