Forut வீட்டுத் திட்ட மக்களுக்கு உறுதிகள் வழங்கி வைப்பு

0
9

ac2a1026-dadd-47f7-af6e-9728543f76faமட்டு மாவட்டத்தின், ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட பாலமுனைக் கிராமத்தில் Forut வீட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் அமைந்துள்ள காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படாத நிலையில் இவ்வீட்டுத் திட்டத்தில் வசித்து வந்த மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்தனர்.

இதனை அறிந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக 2016.05.25ஆந்திகதி (புதன்கிழமை) இக்காணிகளுக்கான உறுதிகள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் , கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி அமைச்சர் ஆரியபதி கலாபதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளிடம் உறுதிகளை கையளித்தனர்.

மொத்தமாக வழங்கப்படவிருந்த 67 உறுதிகளில் இறந்தவர்களின் உறுதிகள் மற்றும் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டிய உறுதிகள் தவிர்ந்த 54 உறுதிகள் பயனாளிகளுக்கு கையளிக்கபட்டதுடன் எஞ்சிய உறுதிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விரைவில் கையளிக்கப்படவுள்ளது.

இம்மக்களுக்கான உறுதிகள் வழங்கப்படாமை குறித்து எவரும் கண்டுகொள்ளாத நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் இது தொடர்பில் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இவ்வுறுதிகள் மக்களுக்கு கிடைக்கப்பெற்றது என்பது ஓர் விசேட அம்சமாகும்.

இதில் காணிகளுக்கான உறுதிகளைப் பெற்றுக்கொண்ட மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கிக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

LEAVE A REPLY