சிறுபான்மை சமூகத்தின் முதுகெலும்புள்ள முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

0
410

(அஹமட் இர்ஷாட்)

168fd2be-f27e-4dfd-9fd1-b21478bdc3b1இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்திய முதலமைச்சர்களில் தற்பொழுதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள், தன்மானம் ,தனித்துவம் போன்றவற்றினை எந்த அரசியல் பின்னணிக்காவும் விட்டுக்கொடுக்காத முதுகெலும்புள்ள முதலமைச்சராக அண்மைக்காலமாக செயற்பட்டு வருகின்றார்.

இச்செயலானது தேசியத்திற்கே எடுத்துக்காட்டாக இருப்பதன் காரணமாகவே அண்மையில் நிகழ்ந்த திருகோணமலை நிகழ்வில் கடற் படை அதிகாரியுடன் இடம் பெற்ற உரிமை சார்ந்த விட்டுகொடுப்பு செய்ய முடியாத சம்பவமாது, எதிரிகளாக செயற்படுகின்ற அரசியல்வாதிகளுக்கும், சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை ஏற்றுகொள்ளத பெருமான்மை சமூகத்தில் உள்ள சில தீவிர போக்குடைய இனவாதிகளின் வாய்களுக்கும் அசைபோடும் சமகால அரசியல் தீனியாக மாற்றப்பட்ட விடயமாக உருவாக்கப்பட்டு வாத பிரதி வாதங்களுக்கு உட்பட்டுள்ளதனை பரவலாக ஊடகங்களில் காணக்கூடியதக இருக்கின்றது.

முதலமைச்சு பதவியினை பொறுப்பேற்ற காலம் தொட்டே கிழக்கு மாகாண ஆளுனருடன் பல முரண்பாடுகளுக்கு மத்தியில் தனது அபிவிருத்தி பணிகளை கிழக்கு மாகாணத்திலே முன்னெடுத்து வருகின்ற முதலமைச்சர் நசீர் அஹமட் இதற்கு முன்பும் கிழக்கு மாகாணம் இலங்கையிலே ஒரு இன, மத, மொழி சார்பற்ற நிலையில் அபிவிருத்தி அடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை பல்முனை நகர்வுகள் ஊடாக அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து முன்கொண்டு செல்ல முற்படுகின்ற பொழுது குறுகிய சிந்தனை உள்ள சில பேரினவாத சக்திகளினாலும் மாற்று அரசியல் சக்திகளினாலும், பல அரசியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளமையினை வரலாறு நெடுகிலும் காணக்கிடைக்கின்றது.

இக்காலகட்டதில் மிக முக்கியமாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனங்களின் அரசியல் தலைமைகளும், புத்திஜீவிகளும், ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாய கடமையாகும். 13வது திருத்த சட்டத்தின் ஊடாக சிறுபான்மை இனங்களை மையப்படுத்தி வழங்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதில் தற்பொழுதைய முதலமைச்சர் நசீர் அஹமட் பதவியேற்ற காலம் தொடக்கம் எந்த அரசியல் சக்திகளுக்கும் சோரம் போகாமல் மிகச் சிறப்பாக செயற்பட்டு வருவதின் காரணத்தினாலேயே இவ்வாறான திட்டமிடப்பட்ட அரசியல் சேறு பூசப்படும் பழிவாங்கள்களுக்கு முகம்கொடுக்க நேரிடுகின்றது.

இதற்கு சீனியினை அள்ளி வாயில் போடுவது போல சுயநல அரசியலினை மேற்கொள்ளும் அரசியல் வாதிகள் எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றும் செயலினை அரங்கேற்றுகின்றனர். இதனை இலங்கையில் உள்ள இரண்டு சிறுபான்மை சமூகங்களும், அதனுடன் சேர்ந்து பெரும்பான்மை சமூகமும் நல்லாட்சி நிலவுகின்ற இக்காலகட்டத்தில் நாட்டின் நலத்திற்காக மட்டுமே ஒரே பார்வையில் செயற்பட வேண்டியது மிக முக்கிய தேவையாகும்.

கிழக்கு மகாண சபையிலே முதலமைச்சர் நசீர் அஹமட்டின் அபிவிருத்தி முன்னெடுப்புகளும்க்கும் அணைத்து அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கும் ஒட்டு மொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களும் தங்களது பூரண ஆதரவினை வழங்கி வருகின்ற இந்த நிலையிலே இவ்வாறான திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை ஏற்படுத்தி அதன் மூலமாக முதலமைச்சரின் உணர்ச்சியினை தூண்டி விட்டு அதனை தங்களுக்கு சாதகமாக பயண்படுத்தி சேறு பூச முற்படும் குறுகிய மனநிலை உடைய அரசியல் வாதிளின் இவ்வாறான முதலமைச்சருக்கு எதிரான ஊடக அறிக்கைகளினால் இனங்களுக்கிடையே பிளவுகளும், கிழக்கு மாகாணம் அண்மைக்காலமாக கண்டு வருகின்ற அபிவிருத்திகளுமே பாதிக்கப்படப் போகின்றது என்பதில் எந்த மாற்றுகருத்துமில்லை.

அதுமட்டுமல்லாமல் இரண்டாவது சிறுபான்மை சமூகமாகவும் கிழக்கிலே பெரும்பான்மை சமூகமாகவும் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்தினையும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினையும் பிரதி நிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண சபையினை ஏனைய மாகாண சபைகளுக்கு முன்னுதாரணாமாக காட்டும் அளவிற்கு தனது ஆளுமையினை மிகவும் துள்ளியமாக செயற்படுத்தி வரும் முதலமைச்சர் நசீர் அஹமட்டினை கால்களுக்கு கட்டுபோடும் ஒரு விடயமாகவே இதனை மிக முக்கியமாக சிறுபான்மை சமூகம் நோக்க வேண்டியுள்ளது.

இலங்கையிலே அரசியல்வாதிகள் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தி பாராளுமன்றங்களிலும், மாகாண சபைகளிலும் , பிரதேச சபைகளிலும் தங்களது பணிகளை மக்களுக்காக செயற்படுத்துவதன் காரணமாகவே மக்கள் பிரதி நிதிகளுக்கு அதி உயர் கெளரவம் வழங்கப்பட்டு வருகின்றது. அதைப் போலவே கிழக்கு மாகாணத்திற்கே தலைமை வகிக்கின்ற முதலமைச்சர் திட்டமிடப்பட்டு அவமானபடுத்தப்படுகின்றார் என்றால் அது ஒட்டு மொத்த கிழக்கு மாகாண மக்களையும் அவமானப்படுத்துகின்ற செயலாகும். இதனை எல்லோரும் உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமானதொன்றாகும்.

இதில் மாற்று அரசியல்வாதிகள் அரசியல் குளிர் காய்வதற்காகவும், தங்களது எதிர் கால அரசியலினை தக்கவைத்து கொள்வதற்காவும் முதலமைச்சருக்கு எதிராக ஊடக அறிக்கைகளை விடுவதானது உண்மையில் மனவேதனை அளிக்க கூடிய விடயமாக இருக்கின்றது. இன்று சிறுபான்மை சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற முதலமைச்சர் நசீர் அஹமட் அவமானப்படுத்த படுகின்றார் என்றால் நாளை நிச்சயமாக முதலமைச்சருக்கு எதிராக ஊடக அறிக்கைகளை விடும் அரசியல்வாதிகள் அவமானப்படுத்தப்பட இருக்கின்றார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

ஆகவே அரசியல் காலங்களில் தங்களது அரசியல் இருப்புக்களை தக்கவைத்து கொள்வதற்காகவும், தங்களது அரசியல் கட்சிகளின் கொள்கைகளுக்காவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரினை விமர்சிப்பதானது எமது நாடு ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்ற அரசியல் உரிமையாகும். ஆனால் இவ்வாறான கிழக்கு மாகாணதினை பிரதி நித்தித்துவப்படுத்தி தலைமை வகிக்கின்ற அரசியல் தலைமையினை திட்டமிட்டு நிகழ்விற்கு அழைப்பித்து அவமானப்படுத்தும் செயலினை தங்களுக்கு கிடைத்த அரசியல் ஆயுதமாக பயண்படுத்தாமல் ஒட்டுமொத்த கிழக்கு மாகாண சமூகத்தினையும் அவமானப்படுத்திய செயலாக கருதி எதிர்காலத்தில் இன, மத, மொழி, வேறுபாட்டிற்கு அப்பால் கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்ய முயலும் தற்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பக்கம் இருக்கின்ற நியாயங்களை நல்லாட்சியினை இந்த நாட்டில் ஏற்படுத்திய எமது கெளரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கரசிங்கவிற்கும் தெளிவு படுத்துவதானது கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல தேசியத்திலும் இன, மத, மொழி வேறுபாட்டிற்கு அப்பால் நின்று கெளரவமான அரசியல் செய்யும் அரசியல்வாதிகளின் கட்டாய கடமையாகும்.

LEAVE A REPLY