ஓட்டமாவடியில் றாபிழா விழிப்புணர்வு, போதை எதிர்ப்புணர்வு இளைஞர் மாநாடு

0
149

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

கல்குடா பிரதேசத்தில் வழிகெட்ட றாபிழா எனும் ஷீஆ கொள்கை பற்றிய விழிப்புணர்வும் அண்மைக் காலமாக பெருகி வருகின்ற போதைப்பொருள் எதிர்ப்புணர்வும் பற்றிய இளைஞர் மாநாடு ஓட்டமாவடி எம்.பீ.ஸீ.எஸ் வளாகத்தில் 27.05.2016 இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிமுதல் இரவு 10.00 மணி வரை கல்குடா அகில இலங்கை கல்குடா கிளை ஜம்இய்யத்துல் உலமாசபையின் வழிகாட்டலில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் முக்கிய உலமாக்கள் உரையாற்றவுள்ளதால் பொது மக்கள் அனைவரும் கலந்துபயன்பெறுமாறுஅன்புடன் அழைக்கின்றோம். பெண்களுக்கு பிரத்தியேக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இம் மாநாட்டில் உரையாற்ற உள்ளோர்

1. தலைமையுரை : அஷ்ஷெய்க் நஜீம் (மன்பஈ) பேஷ் இமாம் -ஹூசைனியா ஜூம்ஆப்பள்ளி வாயல், தியாவட்டவான்

02. ஜனாப் ஏ.அமீர் அலி பொறுப்பதிகாரி – சிறுவர்,பெண்கள் வன்முறைபோதைப் பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸ் நிலையம், வாழைச்சேனை.

03. அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முஹம்மது (காஸிமி) (பொதுத் தலைவர் – ஜம்இய்யதுல் தஃவதில் இஸ்லாமிய்யா -கல்குடா)

04. அல்ஹாபிழ் எப்.பிர்தௌஸ் (யூசூபி) (இஸ்லாமிய அழைப்பாளர்)

05. அஷ்ஷெய்க் எம். றஊப்ஸெய்ன் (பணிப்பாளர், அபிவிருத்தி கற்கைகளுக்கான மையம்)

06. அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல்.எம். முபாறக் (மதனி) (அதிபர் – தாருல் ஹூதா மகளிர் அறபுக்கல்லூரி,மருதமுனை.)

LEAVE A REPLY