கடற்படை அதிகாரியுடன் முதலமைச்சர் நடந்து கொண்ட விதத்தை நியாயப்படுத்த முடியாது

0
146

(றிசாத் ஏ. காதர்)

Mr_Karunasena_Hettiarachchi naseer ahamedகிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது நல்ல நண்பர் என்றபோதிலும், கடற்படை அதிகாரியுடன் அவர் நடந்து கொண்ட விதத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு கலந்து கொண்டபோதே பாதுகாப்புச் செயலாளர் இதனைக் கூறினார்.

முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருடன் – தான் தொலைபேசியில் உரையாடியதாகவும், அன்போது, அவர் நிதானமாகச் செயற்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்ததாகவும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதுதொடர்பில் பகிரங்கமாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ முதலமைச்சர் மன்னிப்புக் கோருவதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை என்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

LEAVE A REPLY