முள்ளிவாய்க்கால் நினைவுப் பதிவு பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்

0
193

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

1வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நேற்று (25) புதன்கிழமை தமிழ் மாணவர் ஒருவர் மீது பல சிங்கள மாணவர்கள் சேர்ந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

முதலாம் ஆண்டு முகாமைத்துவப்பீட மாணவன் இலட்சியமூர்த்தி சுமேஸ்காந் (வயது 23) என்ற மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டு செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்டார்.

குறித்த மாணவன் கடந்த மே 18ம் திகதி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தினை நினைவு கூறும் பொருட்டு முகப்புத்தகமொன்றில் மே 18 என்ற வாசகமிட்ட ஒரு புகைப்படத்தை பதிவுசெய்ததன் காரணமாகவே பல சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2

LEAVE A REPLY