கணவன் அடித்துக் கொலை, மனைவி படுகாயம்

0
207

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Murder_titleமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையைச் சேர்ந்த ஒருவர் நேற்று (25) புதன்கிழமை இரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்த சீனித்தம்பி மோகன் வயது 46 என்பவர் தடிகள், இரும்புக் கம்பிகளால், தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மரணமடைந்தவரின் மனைவியான இராஜேஸ்வரி (வயது 44) என்பவரும், பலத்த அடி காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 2 போரை சந்தேகத்தின் போரில், கைதுசெய்துள்ளதாகவும், இதனுடன் தொடர்பு பட்டதாகத் தெரிவிக்கப்படும் மேலும் 4 பேரைத் தேடிவருவதாகவும், களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்ததுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை வியாழக்கிழமை (26) காலை இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். றிஸ்வான், பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பொறுப்பதிகாரி சனத் நந்தலால், உள்ளிட்டோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப் பட்டுள்ளது, இதனை, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். றிஸ்வான், பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பொறுப்பதிகாரி சனத் நந்தலால், உள்ளிட்டோர் வியாழக்கிழமை பார்வையிட்டுள்ளனர்.

சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனையின் பின்னர் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கையைச் சமரிப்பிக்குமாறு களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். றிஸ்வான், உத்தரவிட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே. சுகுணன் தெரிவித்தார்.

LEAVE A REPLY