(Photos) கொலன்னாவையில் இன்னும் பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படல் வேண்டும்: வஜிர தேரர்

0
34

(அஷ்ரப் ஏ. சமத்)

200q“கொலாநாவையில் இன்னும் இன்னும் பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படல் வேண்டும். அதில் மீள நிர்மாணிக்கப்பட உள்ள பள்ளிவாசலுக்கு முதல் முதலில் நானே சீமெந்துப் பக்கட்டுக்களை வழங்கி நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைப்பேன்” என கொலாநாவை பௌத்த விகாரையின் பிரதான தேரர் வஜிர தேரர் தெரிவித்தார்.

கொலாநாவை ஜும்ஆப் பள்ளிவாசலில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கடந்த 10 நாற்களாக வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிவாசல்கள் சம்மேளத்தினாலேயே பெளத்த மக்களை நன்றாக கவனித்து வருகின்றனர். அத்துடன் எங்களது பௌத்த பண்சலையில் உள்ள பாதிக்கபட்ட மக்களுக்கு உடன் சமைத்த உணவு தொட்டு இன்று வரையிலான 10 நாற்களுக்கும் போதிய பொருள் உதவிகளை தாராளமாகச் செய்துவருகின்றனர். ஆகவே தான் எமது பிரதேசத்தில் கூடுதலான பள்ளிவாசல்கள் நிர்மாணிக்படல் வேண்டும்.

முஸ்லிம்கள் வேறு பிரதேசங்களில் இந்தப் பள்ளிக்கு வழங்கிய உதவிகளை 50-50 வீதமாக வெள்ளவத்தினால் பாதிக்கப்பட்ட பெளத்த மக்களுக்கும் கவனித்து வருகின்றனர். இந்தப் பள்ளிவாசல் தலைவா் ஹனீப் ஹாஜி தலைமையில் சமைத்த உணவு தொட்டு உறங்குவதற்கு பெட்சீட் வரையிலான பொருட்கள் கடந்த 10 நாற்களாக கிடைக்கப் பெற்றது.

எங்களது பௌத்தர்கள் அல்லது அரசின் உதவிகள் தற்பொழுதுதான் எங்களுக்கு கிடைத்து வருகின்றது. அதனை விட ஆபத்துக்கு உதவியவர்கள் இப் பிரதேச முஸ்லிம்கள் ஆவார்கள். அது மட்டுமல்ல. பேருவளை, நீர்கொழும்பு பிரதேசத்தில் இருந்து இயந்திரப் படகுகளையும் தருவித்து எங்களை கரைசேர்தார்கள்” எனத் தேரா் தெரிவித்தார்.

200a 200d 200e 200f 200g 200h 200n 200o

LEAVE A REPLY