எம்.பி. பதவியோ அமைச்சுப் பதவியோ நான் கோரவில்லை: மு.கா. செயலாளர் ஹஸனலி

0
191

hassan ali_CIஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முக்கும் எனக்கும் இடையில் அண்­மையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியோ அமைச்சுப் பத­வியோ நான் கோர­வில்லை.

அது பற்றி பேசக்­கூ­ட­வில்லை. ஆனால் ஊட­கங்கள் இப்­ப­த­வி­களை நான் கோரி­ய­தாக தவ­றான செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார்.

செய­லாளர் நாயகம் ஹசன் அலிக்கும் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கும் இடையில் அண்­மையில் நடை­பெற்ற பேச்சு வார்த்தை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

“பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியும் அமைச்சுப் பத­வியும் கட்­சிப்­பி­ரச்­சி­னை­யல்ல அது தலை­வ­ருக்கும் எனக்­கு­முள்ள பிரச்­சினை இப்­பி­ரச்­சினை முதன்­மைப்­ப­டுத்­தப்­ப­ட­வு­மில்லை பேசப்­ப­ட­வு­மில்லை.

செய­லாளர் பதவி பற்­றியே பேசினோம். செய­லா­ளரின் அதி­கா­ரங்கள் பற்றி பேசினோம். பேச்­சு­வார்த்­தையின் போது இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள இரண்டு மெள­ல­விகள் மீண்டும் கட்­சியின் அர­சியல் உயர்­பீ­டத்தில் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வ­தற்கு இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

பேச்­சு­வார்த்­தைகள் முற்­றாக முடி­ய­வில்லை. அதற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள மூவ­ர­டங்­கிய குழு நடை­பெற்ற பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை அமுல்படுத்த வேண்டியுள்ளது. பேச்சுவார்த்தை சுமுகமாகவே முடிவுற்றது” என்றார்.

#Vidivelli

LEAVE A REPLY