கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தலைமையிலான குழுவினர் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு விஜயம்

0
194

(றிசாத் ஏ காதர்)

64766d12-75fc-4f5a-948d-bc1980c94176கிழக்கு மாகாண கல்வி அமைச்சு,மாகாண கல்வித் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழு வியாழக்கிழமை (26ஆம் திகதி நாளை) அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டு கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயவுள்ளதாக அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசீம் தெரிவித்தார்.

மேற்படி இவ்விஜயத்தில் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, மாகாண கல்விப்பணிப்பாளர் என்.ரீ.எம்.நிசாம், கல்வியமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன மற்றும் கல்வியமைச்சின் உதவிச்செயலாளர்கள், மேலதிக மாகாணப் பணிப்பாளர்கள், மாகாண கல்வித் திணைக்கள பிரதம கணக்காளர் பீ.கேதீஸ்வரன், பாடங்களுக்குப் பொறுப்பான பிரதி, உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் விசேட செயற்றிட்டத்திற்கமைவாக மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு கல்விச்செயற்பாடுகளை மதிப்பிடுகின்ற விஜயத்தின் ஒரு கட்டமாகவே அக்கரைப்பற்று வலயத்திற்கான இவ் விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY