ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவி றஹ்மதுல்லாஹ் சம்ஹா சாதனை

0
205

(H.m.m பர்ஸான்)

resizeசர்வதேச சிங்க சமாஜங்களின் இணையம் (Lions Clubs international) எனும் அமைப்பினால் நடாத்தப்படும் நாடளாவிய ரீதியிலான 22 ஆவது வருட கட்டுரைப் போட்டியில்

1.”போதைப் பொருள் பாவணையற்ற இலங்கை திரு நாடு”

2.”ஒழுக்கமான வாழ்க்கையே எச்.ஐ.வி/ எய்ட்சை ஒழிக்கும் வழி”

ஆகிய இரண்டு தலைப்புக்களிலும் கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றி அகில இலங்கை ரீதியில் முறையே முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றுள்ள ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவி வாழைச்சேனை உமர் வைத்தியர் வீதியை சேர்ந்த றஹ்மதுல்லாஹ், ஹயருன் நிஷா ஆசிரியையின் மகளாவார்.

இவருக்கான பாராட்டு சான்றிதழும், பணப்பரிசும் வழங்கும் வைபவம் எதிர்வரும் ஜுன் மாதம் 5ம் திகதி வித்தியா மாவத்தை கொழும்பு 7ல் உள்ள Lion Activity Center எனும் இடத்தில் இடம் பெற இருக்கிறது.

LEAVE A REPLY