பிரட்டனில் ஆன்டிபையாடிக் பரிந்துரைப்பதின் அளவில் கடும் வீழ்ச்சி

0
93

160525065312_medic_2867955hபிரிட்டிஷ் அரசின் பிரச்சாரத்தை அடுத்து அங்கு மருத்துவர்கள் ஆன்டிபையாடிக் மருந்துகளை பரிந்துரைப்பதின் அளவு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் (என்.எச்.எஸ்) புள்ளிவிவரங்களின் படி கடந்த வருடம், மருத்துவர்கள் ஆன்டிபையாடிக் பரிந்துரைப்பதை ஒரு சதவீதம் குறைக்க வேண்டும் என்ற இலக்கைத் தாண்டி, அது ஏழு சதவீதமாக குறைந்திருக்கிறது.

ஆன்டிபையாடிக்கை உலக அளவில் அதிக அளவில் பயன்படுத்துவதால் அது பாக்டீரியா இது போன்ற மருந்துகளை எதிர்த்து நீடிக்கும் தன்மையை அதிகரிக்கிறது.

இது தொற்றுநோய்களை குணப்படுத்துவதை கடினமாக்குகிறது.

சீன அரசு 2012ல் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுக்கப்படுத்தியதின் விளைவாக, சீன மருத்துவமனைகளில் ஆன்டிபையாடிக் பயன்பாடு 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று செவ்வாய்க் கிழமையன்று சீன ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY