அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தினால் சப்ரகமுவ மாகாணத்திற்கான களப்பயணம்

0
123

(அப்துல் ஹாதி)

43f06f20-c621-4701-abc0-38384a333b5dஅம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தினால் சப்ரகமுவ மாகாணத்திற்கான களப்பயணம் அண்மையில் போரத்தின் தலைவர் எம.ஏ.பகுர்த்தீன் தலைமையில் இடம்பெற்றது.

சப்ரகமுவ மாகாணத்தின் முக்கிய கேந்திர நிலையங்களுக்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்கள் அது தொடர்பாக பல்வேறு தரவுகளையும் பெற்றுக்கொண்டனர்

விசேடமாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தற்போது சர்ச்சைகளுடன் இயங்கும் ஜெய்லானி பிரதேசத்திற்கான விஜயத்தின் போது அங்கு ஏற்பட்டுள்ள நிலமைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன், கடந்த ஆட்சியில் ஏற்பட்ட நிலைமை இன்னும் சீர்செய்யப்படாமல் இருப்பதாகவும் அதற்காக தங்களின் பேனாக்களின் ஊடாக நீதி பெற்றுத்தருமாறும் மக்கள் இவ் ஊடகவியலாளர்களிடம் கோரிக்கைவிடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கான விஜயத்தின்போது பதிவாளர் ஹிபத்துல் கரீம் பல்கலைக்கழகம், கற்கைநெறிகள் மற்றும் இதர விடயங்கள் தொடர்பாக விரிவான விளக்கமளித்ததுடன், இம்மாகாணத்தில் பிரசித்திபெற்ற சமனல நீர்த்தேக்கத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு அது தொடர்பான வரலாற்றுத் தகவல்களும் ஊடகவியலாளர்களுக்கு பதிவாளரினால் வழங்ப்பட்டது. இக்கள விஜயத்தின் போது அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பணியாற்றும் 25க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

8f050cc2-8dbf-4e10-a643-bd46e7468948

43f06f20-c621-4701-abc0-38384a333b5d

052890dd-586c-4fc6-920b-f0762c445411

LEAVE A REPLY