வெள்ள அகதிகளுக்கான சிகிச்சை முகாம்கள்: சக அமைப்புகளுடன் இணைந்து முஸ்லிம் எய்ட் களத்தில்..

0
136

(அஸீம் கிலாப்தீன்)

f9237497-2565-49b1-8c37-20c2fd4ddb2eஇன்று காலை (24) கல்நாவ பன்சல வில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 60 பேரும் முல்லேரியா கெக்குணுவத்த பன்சல மருத்துவ முகாமில் 30 அகதிகளும் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டனர். முதலாவது மருத்துவ முகாமில் 6 வைத்தியர்களும் இரண்டாவது முகாமில் 4 வைத்தியர்களும் இவர்களுடன் முஸ்லிம் எய்ட், MFCD, சபாப் அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் பங்குபற்றினர்.

இம் முகாமிற்கான மருந்து மற்றும் தொண்டர்களை முஸ்லிம் எய்ட் ஏற்பாடு செய்ய, அம்புலன்ஸ் வாகன ஏற்பாடினை சபாப் அமைப்பு வழங்கியிருந்தது. முற்பகலில் தமது மருத்துவ சிகிச்சைகளை இரண்டு முகாம்களிலும் முடித்துக் கொண்ட வைத்தியகுழாம் MOH இன் அனுமதியுடன் பிற்கல் கொட்டிகாவத்த பகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்கத் தயாராகின்றது.

சுகாதார ஒருங்கிணைப்புக் கொமிட்டியின் (HCC) ஊடாக கொலொன்னாவ MOH உடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில், MHO இன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பாக (RCC) இன் ஒரு அங்கமாக அமைக்கப்பட்ட HCC இன் ஏற்பாட்டில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இணைந்து அகதிகளுக்கான மருத்து சிகிச்சை முகாம்கள் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இன்றும் கொலன்னாவ எம்ஓஎச் வைத்திய குழுவினரின் கள விஜயத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான வாகன ஏற்பாடுகளை முஸ்லிம் எய்ட் அமைப்பும், SFRD அமைப்பும் வழங்கியிருந்தது.

LEAVE A REPLY