கிழக்கு முதலமைச்சரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 கோடி 55 இலட்ச ரூபாய் செலவிலான 49 அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

0
160

(ஏ.எச்.ஏ. ஹு ஸைன்)

Naseer Hafisகிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் புதன்கிழமை 25.05.2016 மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 கோடி 55 இலட்ச ரூபாய் செலவிலான பல்வேறு 49 அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அதில் முதலாவது திட்டமாக மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள ரிதிதென்ன இக்றஹ் வித்தியாலயத்தில் 55 இலட்ச ரூபாய் செலவில் நிருமாணிக்கப்படவுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை முதலமைச்சர் புதன்கிழமை நாட்டி வைத்தார். இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் 8 கோடி 36 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் 29 திட்டங்கள் முதலமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

கல்குடாத் தொகுதியில் 10 பாடசாலைகளுக்கான கட்டிட அபிவிருத்திக்கு 55.1 மில்லியன் ரூபாவும், 7 வீதிகள் கொங்கிறீற் இடப்படுவதற்காக 20.5 மில்லியன் ரூபாவும், கிணறு அமைத்தல் மற்றும் குடி நீர் வசதிக்காக 6 மில்லியன் ரூபாவும், நூலக அபிவிருத்திக்காக 2 மில்லியன் ரூபாவும், வணக்கத் தலங்களின் சுற்றுமதில் அமைப்பதற்காக 1.6 மில்லியன் ரூபாவும், படகுத்துறை அபிவிருத்திக்காக 4 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், மக்களின் வாழ்க்கைத் தரம், வருமானம், ஆகியவற்றில் அபிவிருத்தி அடைந்து பொருளாதாரத்திலும் உணவு உற்பத்தியிலும் தன்னிறைவுள்ள ஒரு மாகாணமாக கிழக்கை மாற்றுவதற்கான தூரநோக்குள்ள வரைவுத் திட்டத்தின் முதற்கட்டம் இதுவென்று முதலமைச்சர் செயலகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY