சித்தாண்டியில் வேன் மற்றும் மோட்டார் வாகனம் விபத்து: வேன் தப்பி ஓட்டம்

0
131

(முஹமட் அல் நஹ்யான்)

இன்று (25) மாலை 5 மணியளவில் மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதியில் மோட்டார் வாகனத்தில் வந்த இருவர் வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து வேகமாக வந்த வேன் ரக வாகனம், மோட்டார் வாகனத்தில் ஓட்டமாவடிக்கு சென்று கொண்டிருந்த பிளாஸ்டிக் வியாபாரியான 45 வயதுடைய கச்சி முஹம்மது என்பவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர் சந்திவெளி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

2bec2f34-b983-44f4-bf91-1bcccf2b302f

3d8dbe29-6424-40e3-b177-669edf890cae

8a5488ca-f829-491e-a77c-1161af123b0b

9e90c5ca-97de-4df0-80e7-e139cb5efb8c

LEAVE A REPLY