விமானப் படை ஹெலிகொப்டர் விபத்து

0
87

lapd_bell_206_helicpoterஇலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 206 வகை ஹெலிகொப்டர் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த விமானம் ஹிங்குராக்கொடை விமானப்படை தளத்தில் தரையிறங்கும் வேளையிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதில் விமானிக்கு எவ்வித உயிர் ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தான முழுமையான சேத விபரம் இது வரை அறிவிக்கப்படவில்லை.

#Thinakaran

LEAVE A REPLY