ஜனாதிபதி இன்று ஜப்பான் பயணம்

0
91

அல3-600x330ஜப்பானில் இடம்பெறும் ‘ஜீ 7’ நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜப்பான் பயணமாகிறார். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா, ஜேர்மன், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இம்மாநாடு 26, 27 ஆம் திகதிகளில் ஜப்பான் இசெசிமாவில் இடம்பெறவுள்ளது.

இதன்போது ஜனாதிபதி இலங்கையில் மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், நீதிக்கான சுதந்திரம் ஆகியவற்றை பலப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளார்.

‘ஜீ 7’ நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ள ஜனாதிபதி ஐந்து ஆசிய நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

LEAVE A REPLY